புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
பொங்கல் அன்று சேலையில் தேவதைபோல் காட்சியளிக்கும் யாஷிகா.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்..
நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.
துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள்.
இதனை அடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார் யாஷிகா. தற்போது தொடர்ந்து சினிமாவில் பிசியாக நடித்துவரும் இவர் எப்போதும் சமூக வலைதள பக்கங்களிலும் பயங்கர ஆக்டிவாக உள்ளார்.
எப்போதும் தனது புது புது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கர்களை உற்சாகப்படுத்திவரும் இவர் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலை கட்டி, குடும்ப குத்து விளக்குபோல் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.