Eeramaana Rojaavey 2: விஜய் டிவி ஈரமான ரோஜாவே 2 சீரியல் நேரம் மாற்றம் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
WWE ஜாம்பவான் தி ராக் குடும்பத்திற்கே இப்படியொரு சோதனையா! அவரே வெளியிட்ட தகவலால் ஷாக்கான ரசிகர்கள்!
WWE ஜாம்பவான் தி ராக் குடும்பத்திற்கே இப்படியொரு சோதனையா! அவரே வெளியிட்ட தகவலால் ஷாக்கான ரசிகர்கள்!

பிரபல WWE மல்யுத்த வீரரும், ஹாலிவுட் நடிகருமான டிவைன் ஜான்சன் தனது குடும்பத்தினருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக வெளியிட்டுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹாலிவுட்டில் பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ், தி மம்மி ரிட்டர்ன்ஸ், ஹெர்குலஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் டிவைன் ஜான்சன். மேலும் இவர் உலகெங்கும் புகழ்பெற்று விளங்கும் மாபெரும் WWE மல்யுத்த வீரர் ஆவார். இவர் தி ராக் என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.
இந்நிலையில் அவர் தற்போது தனது இன்ஸடாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் நான், என் மனைவி மற்றும் இருமகள்கள் என அனைவருக்கும் கடந்த 3 வாரங்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதிர்ஷ்டவசமாக எனது மகள்களுக்கு லேசான அறிகுறி தான் இருந்தது. எனக்கும் மனைவிக்கும் தீவிர அறிகுறிகள் இருந்தாலும் நாங்கள் இப்போது நலமுடன் இருக்கிறோம் என கூறியுள்ளார்.
மேலும் அவர் அனைவரும் கவனமாக இருங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளுங்கள். வெளியே செல்லும் போது மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள், வெளியில் இருந்து யாரையும் உங்கள் வீட்டிற்குள் வரவோ அல்லது கூட்டம் கூடவோ அனுமதிக்காதீர்கள் என கூறியுள்ளார்.