சினிமா

செல்லமாக வளர்த்த பூனைகளால் கொடூரமாக பலியான பெண்ணின் உயிர்! நெஞ்சை பதறவைக்கும் பகீர் சம்பவம்!

Summary:

செல்லமாக வளர்த்த பூனைகளால் கொடூரமாக பலியான பெண்ணின் உயிர்! நெஞ்சை பதறவைக்கும் பகீர் சம்பவம்!

ரஷ்யாவில் பெண் ஒருவரை அவர் வளர்த்து வந்த பூனைகளே கொன்று தின்ன சம்பவம் நெஞ்சை பதற வைத்துள்ளது. அண்மையில் ரஷ்யாவைச் சேர்ந்த பெண் ஒருவர் போலீசாருக்கு போன் செய்து தனது தோழி நீண்ட நாட்களாக ஆபீஸ் வரவில்லை. மேலும் அவரை தொடர்புகொள்ளவும் முடியவில்லை. இவ்வாறு அவர் இருந்ததில்லை என பதறியவாறு கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட போலீசார் குறிப்பிட்ட பெண்ணின் வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அப்பெண் தனது வீட்டில் 20க்கும் மேற்பட்ட Maine Coon cat வகையைச் சேர்ந்த பூனைகளை வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் வேலை விஷயமாக இரு நாட்கள் வெளியே சென்றிருந்த நிலையில் பூனைகள் சாப்பாடு எதுவுமின்றி பெரும் பசியில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையிலேயே வீட்டிற்கு திரும்பிய அந்தப் பெண்ணின் மீது கொடூர பசியில் இருந்த அந்த பூனைகள் தாவிக் கொன்று அவரது உடலை தின்றுள்ளது. மேலும் இறந்து கிடந்த அந்தப் பெண்ணின் உடலையும் பூனைகள் தின்றுகொண்டு இருந்துள்ளது. பின்னர் போலீசார் அப்பெண்ணின் உடலை மீட்டுள்ளனர். மேலும் சில பூனைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நன்றாக இருந்த பூனைகள் வேறு சில இடங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement