BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
அடுத்த படத்தில் விஜயும் ஷாருக்கானும் இணைகிறார்களா.? அட்லி வெளியிட்ட புது அப்டேட் !
ஜவான் திரைப்படத்திற்கு பிறகு அண்மையில் அட்லீ வழங்கிய ஒரு பேட்டியில், ஷாருக்கானையும், தளபதி விஜயையும் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடிக்க வைப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்திருக்கிறார்.
இந்த தகவல் விஜய் ரசிகர்கள் மற்றும் தமிழ் சினிமா வட்டாரங்களில் தற்போது பேசு பொருளாக மாறியிருக்கிறது. பிகில், மெர்சல், தெறி உள்ளிட்ட 3 வெற்றி படங்களை தளபதி விஜயை வைத்து அட்லீ இயக்கியுள்ளார்.பாலிவுட் திரையுலகில் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கினார்.

இந்த படம் இந்த ஆண்டின் அதிக வசூல் வேட்டை நடத்திய திரைப்படங்களில் ஒன்றாக மாறியது. 1000 கோடிக்கு மேல் வசூலித்து, இந்த ஜவான் திரைப்படம் வசூல் சாதனை படைத்திருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் ஷாருக்கான் தந்தை, மகன் என இரட்டை வேடங்களில் நடித்தது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தொடக்கத்தில் இந்த திரைப்படத்தில் சேமியா ரோலில் விஜய் நடிப்பதாக செய்திகள் வெளியாக தொடங்கினர். ஆனாலும் இது தொடர்பான செய்திகள் அனைத்தும் வதந்தியாகவே காணப்பட்டது. தற்சமயம் அண்மையில் அட்லீ வழங்கிய ஒரு பேட்டியில், உண்மையில் ஷாருக்கான் மற்றும் விஜய் உள்ளிட்ட இருவரையும், ஒரே திரைப்படத்தில் நடிக்க வைப்பதற்கான முயற்சியில் தான் ஈடுபட்டு வருவதாக கூறியிருக்கிறார்.
ஜவான் திரைப்படத்திற்கு பிறகு மறுபடியும் தளபதி விஜயுடன் ஒன்றிணைந்து அட்லீ ஒரு புதிய படத்தை இயக்க இருக்கின்றார் என்றும் சொல்லப்பட்டது. ஆனாலும் அவருக்கு பாலிவுட்டிலிருந்து பல்வேறு வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றது.
ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் எதிர்வரும் மாதம் டங்கி என்ற திரைப்படம் வெளியாகியிருக்கிறது. அதன் பிறகு சுஜோய் கோஷ் என்ற திரைப்படத்தில் ஷாருக்கான் தன்னுடைய மகளான சுகானா கானுடன் இணைந்து நடிக்கவுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

பிரபல இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான லியோ திரைப்படம் இன்னமும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த திரைப்படம் இதுவரையில் 600 கோடி ரூபாய் வரையில் வசூல் சாதனை படைத்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்த திரைப்படம் எல்.சி.யூவின் ஒரு பகுதியாக இருந்தது.
பல பிரச்சனைகளை கடந்து இந்த லியோ திரைப்படம் வெளியாகி, மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில், தன்னுடைய 68வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் முக்கிய காட்சிகள் தாய்லாந்தில் படமாக்கப்பட்டு வருகின்றன. இதில் பிரசாந்த் மைக் மோகன், சினேகா, பிரபுதேவா, லைலா மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க இருக்கிறார்கள்.
தளபதி விஜயின் 68வது திரைப்படம் தொடர்பான அப்டேட்கள் அந்த படக்குழுவினர் மூலம் உடனுக்குடன் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவில் ஆரம்பித்து, தாய்லாந்து வரையில் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா சமூக வலைதளங்கள் மூலமாக அப்டேட்டுகளை வழங்கி வருகின்றார். இன்று காலை விஜய் தாய்லாந்தில் தன்னுடைய படப்பிடிப்பை முடித்துக் கொண்டு, சென்னை திரும்பியிருக்கிறார். விஜய் ஏர்போர்ட்டில் நடந்து வரும் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.