தமிழகம் காதல் – உறவுகள்

என்ன வேணுமானாலும் செய்துகொள்.! பெண்ணின் ஒத்த வார்த்தையால் நேர்ந்த விபரீதம்.! வெளியான அதிர்ச்சி சம்பவம்!!

Summary:

wife illegal lover killed her husband

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் வசித்து வந்தவர் உதயபாலன். தொழில் அதிபரான இவரது மனைவி உதய லேகா. இந்த தம்பதியினருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு உதயபாலன் தனது அறையில் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார்

 இதனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்தது. அதில் அவரது மனைவி உதயலேகாவே தனது கள்ளக்காதலன் பிரபாகரனுடன் இணைந்து கணவரை கொடூரமாக கொலை செய்தது அம்பலமானது.

 அதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட உதயலேகா அளித்த வாக்குமூலத்தில், எங்களது திருமண வாழ்க்கை நன்றாக சென்று கொண்டுடிருந்தபோது கால் டாக்ஸி டிரைவர் பிரபாகரன் மூலம் பிரச்சினை எழுந்தது. எனது கணவர் வெளியூருக்கு செல்லும் போது நான் பிரபாகரனின் கால் டாக்சிகள்தான் வெளியே செல்வேன். அவர் என்னிடம் அன்பாக பழகினார்.  மேலும் அடிக்கடி எனது வீட்டிற்கும் வந்து செல்வார்.

 மேலும் அவருக்கு நான் நிறைய பண உதவியும் செய்துள்ளேன். இந்நிலையில் இது குறித்து விவரமறிந்த எனது கணவர் என் மீது சந்தேகப்பட்டு என்னை விவாகரத்து செய்யவும் முடிவு செய்தார். இதனால் மாபெரும் மன உளைச்சலில் இருந்த நான் பிரபாகரனை வீட்டிற்கு வர வேண்டாம் என கூறினேன். ஆனால் அதனை கேட்காமல் அவர் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தார். மேலும் தங்களுக்கு இடையூறாக இருக்கும் கணவரை கொன்று விடலாம் எனவும் திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருந்தார். அப்பொழுது இருந்த மனநிலையில் நானும் ஏதாவது செய் என கூறினேன்.

தொடர்புடைய படம்

 இந்நிலையில் நான் எனது பெற்றோர் வீட்டிற்கு சென்ற நிலையில், வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் பிரபாகரன் உதயபாலனை கொலை செய்துள்ளார்.  பின்னர் வீடு  முழுவதும் மிளகாய் பொடியை தூவி விட்டு நகை மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார் என கூறியுள்ளார்.

மேலும்  இது குறித்த விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமயத்திலே, பிரபாகரன் உயிரிழந்தார் அதனைத் தொடர்ந்து தற்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் நிரூபிக்கப்பட்டதால் உதயலேகாவிற்கு இரட்டை ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர்.


Advertisement