"என்னை மாட்டி விடுவதில் ஏன் இவ்வளவு ஆர்வம்.?" மாமன்னன் ஆடியோ லாஞ்சில் கீர்த்தி சுரேஷ் வைரல் டாக்!why-u-guys-want-me-to-getting-married-keerthi-suresh-op

ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடிக்கும் திரைப்படம் மாமன்னன் கர்ணன் மற்றும் பரியேறும் பெருமாள் ஆகிய திரைப்படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கும் மூன்றாவது படம் இதுவாகும். இந்தத் திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன், வடிவேலு, ஃபகத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து  விரைவில் வெளியாக இருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றனர். இதனைத் தொடர்ந்து மாமன்னன் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

Mamannan

இந்த நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின்  பிரபல நடிகர்களும் இயக்குனர்களும் கலந்து கொண்டனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர் உரையாடினார்.

Mamannan

 நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த திரைப்படத்தில் நடித்திருப்பதால்  மிகுந்த எதிர்பார்ப்புடன் இருப்பதாக தெரிவித்தார் . இந்தத் திரைப்படம் புதுவான ஒரு பிரச்சினையைப் பற்றி பேசுகிறது என்றும்  தான் இதில் ஒரு கம்யூனிஸ்ட் ஆக நடித்திருப்பதாகவும் தெரிவித்தார் . எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறது ஏன் இவ்ளோ ஆர்வமா இருக்கீங்க என செய்தியாளர்களிடம் கேட்டார். மேலும்  தனக்கு திருமணம் என்றால் நிச்சயமாக தெரிவிப்பேன் என அவர் கூறினார்