சினிமா

மொட்டை ராஜேந்திரன் தலையில ஏன் முடி இல்ல தெரியுமா? இதுக்கு பின்னாடி இப்படி ஒரு சோக கதையா?

Summary:

Why mottai rajendhiran has no hair on head

தனது அழகிய நடிப்பாலும், குரலாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பெரிய இடத்தை பிடித்தவர் நடிகர் மொட்டை ராஜேந்திரன். வயதானாலும் மிகவும் கட்டுமஸ்தான் உடலில் காணப்படும் இவர் நான் கடவுள் திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானார்.

நான் கடவுள் திரைப்படத்திற்கு பிறகு இவரை அனைவரும் நான் கடவுள் ராஜேந்திரன் என்று அழைக்க ஆரம்பித்தனர். ஆனால் பின்னர்வந்த படங்களில் இவர் மொட்டை ராஜேந்திரன் என்று அழைக்க ஆரம்பித்துவிட்டனர்.

ஸ்டண்ட் கலைஞராக பல திரைப்படங்களில் நடித்திருக்கும் ராஜேந்திரன் ஒருசில காலம் வரை தனது தலையில் அதிக முடியுடன்தான் இருந்துள்ளார். பிறகு ஏற்பட்டு ஒரு விபத்துகாரணமாகத்தான் இவரது தலையில் முடி அனைத்தும் கொட்டியுள்ளது.


நீங்கள் கொஞ்சம் உத்து கவனித்திருந்தால் தெரியும், தலை என்று மட்டுமின்றி இவருக்கு தாடி, மீசை, ஏன் புருவத்தில் கூட முடி இருக்காது. எந்த காரணத்தால் ஸ்டண்ட் மேன் ராஜேந்திரனுக்கு இந்த நிலை ஏற்பட்டது தெரியுமா?

மலையாளம்!

மலையாள திரைப்படம் ஒன்றில் ஸ்டண்ட் மேனாக நடித்துவந்தார் ராஜேந்திரன். அப்போது அருகில் உள்ள குளம் ஒன்றில் இவர் குதிக்கவேண்டும் என்பதுதான் காட்சி. ஸ்டண்ட் மேன்களுக்கு ஏறுவது, குதிப்பது இதெல்லாம் சாதாரண விஷயம்தான். பெரிய பெரிய கட்டிடங்களில் இருந்தெல்லாம் குதிக்கும் இவர்களுக்கு குளத்தில் குதிப்பது ஒரு கஷ்டமா என நினைத்து குளத்தில் குதித்துள்ளார் நடிகர் ராஜேந்திரன்.

கெமிக்கல் குளம்!

ஆனால் அந்த குளத்தில் இருந்த நீர் சாதாரண நீர் அல்ல. பலவகையான கெமிக்கல் கலந்த நீர். ஆரம்பத்தில் இதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை. இந்த குளத்தில் குதிப்பதால் தானும் முடியை இழப்போம் என்று ராஜேந்திரனும் எதிர்ப்பார்க்கவில்லை.

அலர்ஜி!

ராஜேந்திரனுக்கு குளத்தின் கெமிக்கல் நீர் காரணமாக உடலில் அலர்ஜி உண்டானது. இதன் காரணத்தால் தலை, தாடி, மீசை ஏன், புருவத்தின் முடி முதற்கொண்டு முற்றிலும் இழந்தார் ராஜேந்திரன். மேலும், ஏற்கனவே சீரிய உடற்பயிற்சி செய்து கட்டுமஸ்தான உடல் கொண்டிருந்த ராஜேந்திரன் அவர்களது முகம் ரஃப் அன்ட் டஃப்பாக தான் இருக்கும். இதில், இந்த அலர்ஜி காரணத்தால் முடி இழப்பு நேரிட அவரது முகம் வில்லனுக்கே உரித்தான முகம் போல மாறியது.


Advertisement