சினிமா

அடுத்த ரஜினி படத்தின் வில்லன் யார்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க! அட இவரா?

Summary:

Who is the villan actor of rajinikanth tharpar movie

இயக்குனர் AR முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகவுள்ளது தர்பார் திரைப்படம். பொதுவாக AR முருகதாஸ் படம் என்றாலே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் AR முருகதாஸ் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஜினிக்கு வில்லனாக யார் நடிக்கவுள்ளார் என்பது குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதீக் பாப்பர் பாலிவுட் வட்டாரத்தில் மிகவும் பிரபலமான பெயர். தேசிய விருதுபெற்ற நடிகையான ஸ்மிதா பாட்டீல், ராஜ்பப்பர் தம்பதியின் மகனான இவர் 2008ல் ‘ஜானே தூ’ படத்தின் மூலம் அறிமுகமாகி இந்தியின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். 

அமீர் கான் தயாரிப்பில் வெளியான ‘தோபி காட்’,’தம் மாரோ தம்’, ‘மை ஃப்ரண்ட் பிண்டோ’  உட்பட பல்வேறு படங்களில் நடித்திருக்கும் பிரதீக் இதுவரை வேற்றுமொழிப் படங்களில் அறிமுகமாகவில்லை. தர்பார் படம்தான் இவரது முதல் படம்.

இவரை குறித்து மேலும் சுவாரசியமான செய்தி என்னவென்றால் நடிகை எமி ஜாக்சனும், பிரதீக்கும் சில ஆண்டுகளுக்குமுன் மிகத் தீவிரமாகக் காதலித்து வந்தனர். திருமணத்தை நோக்கிச் சென்ற அந்தக் காதல் ஒரே ஆண்டில் முறிவுக்கு வந்தது.


Advertisement--!>