சினிமா

தமிழ் சினிமாவில் அடுத்து சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு போகும்.! ரஜினியே கூறிய தகவல்.

Summary:

Who is the next super star in tamil industry

தமிழ் சினிமாவில் 160 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருக்கென உள்ள தனிஸ்டைல் மற்றும் தனிபாணியை வைத்து கொண்டு தனது அசத்தலான நடிப்பை இன்று வரை வெளிப்படுத்தி வருகிறார்.

சூப்பர் ஸ்டாருக்கு என்று உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது. ஒரு சிலர் இவர் அரசியலுக்கு வரவேண்டும் என விரும்புகின்றனர். ஆனால் இவர் அரசியலுக்கு வருவதாக மட்டுமே கூறியுள்ளார்.

மேலும் சமீபத்தில் நடைப்பெற்ற சாமி படத்தின் வெற்றி விழாவின் பொது சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் அடுத்து சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு போகும் என்பதை பற்றி பேசியுள்ளார்.அதில் சூப்பர் ஸ்டார் என்பது ஒரு CM மற்றும் PM போல் அதுவும் ஒரு பதவி மட்டுமே. இது நிரந்தரமான இடம் இல்லை எனக்கு பிறகு யார் திரையுலகில் முன்னிலையில் இருக்கிறாரோ அவர் இந்த பதவிக்கு வருவார்கள் என்று பேசியுள்ளார். 


Advertisement