இவர்தான் நடிகர் பிரகாஷ்ராஜின் முதல் மனைவியா? புகைப்படம்!
இவர்தான் நடிகர் பிரகாஷ்ராஜின் முதல் மனைவியா? புகைப்படம்!

தமிழ் சினிமாவில் தனக்கென மிகப்பெரிய இடத்தை வைத்துள்ளவர் நடிகர் பிரகாஷ்ராஜ். ஹீரோ, வில்லன், குணசித்ர நடிகர் என பலகோணங்களில் நடித்துள்ளார் பிரகாஷ்ராஜ். இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார் பிரகாஷ்ராஜ் அவர்கள்.
பிரகாஷ்ராஜின் முதல் மனைவி பெயர் லலிதா குமாரி. கே.பாலசந்தரின் ‘மனதில் உறுதி வேண்டும்’ படத்தில் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் பிரகாஷ்ராஜை திருமணம் செய்துகொண்டு சினிமாவிலிருந்து விலகினார்.
இந்நிலையில் தங்களது திருமண வாழ்க்கை பற்றி பேசிய லலிதா குமாரி, நாங்க இருவருமே முதிர்ச்சியான சிந்தனையுடன் எடுத்த முடிவு அது. பழைய விஷயங்களை நினைச்சு வருத்தப்பட எதுவுமில்லை. அவர் மீது எனக்கும், என் மீது அவருக்கும் எப்போதும் அன்பு, மரியாதை இருக்கு என்று கூறியுள்ளார்.
இன்னொரு திருமண வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக்கிட்டார். நான், இரண்டு குழந்தைகளுடன் தனி வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சுட்டேன். இப்போ நாங்க நல்ல நண்பர்கள். மேலும் மகள்கள் மீது அதிக அன்பு வைத்துள்ளார். இப்போதும் எங்களது தேவைகளுக்கு அவர்தான் உதவி செய்கிறார் என்று கூறியுள்ளார்.