த்ரிஷா புடவையில் விஜயின் கட்சி கொடி.. பிரபல தயாரிப்பாளர் சரமாரி கேள்வி?
எதிர்நீச்சல் தொடரில் ஆதிரையை திருமணம் செய்ய போகும் நபர் இவர்தானா.. கரிகாலனால் வெளிவந்த உண்மை.!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'எதிர்நீச்சல்' சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. ஆணாதிக்கத்தையும், பெண் அடிமைத்தனத்தையும் முன்னிறுத்தி எடுக்கப்பட்டது எதிர்நீச்சல் சீரியல்.
மேலும் இந்த சீரியலில் நடித்திருக்கும் நடிகர்களை வெகுவாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றன. வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் குணசேகரன் போன்ற ஆண்கள் பெரும்பாலானோர் வீட்டில் இருப்பதால் பெண்கள் இந்த சீரியலை மிகவும் விரும்பி பார்க்கின்றனர்.
தற்போது இந்த சீரியல் நடித்திருக்கும் கதாபாத்திரமான ஆதிரை, அருண் என்பவரை விரும்பிவருகிறார். ஆனால் அவருடைய அண்ணன் குணசேகரன் கரிகாலனை கல்யாணம் செய்து வைக்க எண்ணுகிறார். இதனால் ஆதிரை யாரை திருமணம் செய்யப் போகிறார் என்று ரசிகர்களை குழப்பி வருகிறார் இயக்குனர் திருச்செல்வம்.
இது போன்ற நிலையில் எதிர்நீச்சல் சீரியலின் கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விமல் என்பவர் ஒரு பேட்டியில் ஆதிரை திருமணம் குறித்து பேசியிருக்கிறார். அவர் கூறியதாவது இயக்குனர் ஒருவருக்கே ஆதிரை யாரை திருமணம் செய்ய போகிறார் என்ற தகவல் தெரியும் என்று கூறியிருக்கிறார்.