சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
"இதனால் தான் ஸ்ரீதிவ்யாவிற்கு திருமணம் ஆகவில்லை" பயில்வான் சொன்ன ரகசியம்.!
2000ம் ஆண்டு "ஹனுமான் ஜங்ஷன்" என்ற தெலுங்குப் படத்தில் தனது மூன்றாவது வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஸ்ரீதிவ்யா. தொடர்ந்து சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், 2010ம் ஆண்டு தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமானார்.


இதனை தொடர்ந்து ஸ்ரீதிவ்யா, 2013ம் ஆண்டு சிவகார்த்திகேயனுடன் "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து ஜீவா, வெள்ளைக்கார துரை, காக்கி சட்டை, பென்சில், ஈட்டி, மருது உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடித்த படங்கள் வெற்றியடைந்தாலும் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வரவில்லை. இறுதியாக இவர் "ஜன கன மன" படத்தில் நடித்திருந்தார். நடிகைகள் பலரும் பட வாய்ப்பு கிடைக்கவில்லையென்றால் திருமணம் செய்து செட்டில் ஆகிவிடுவர்.

ஆனால் 30 வயதாகியும் ஸ்ரீதிவ்யா இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. முன்னணி நடிகையாக வளர்ந்த பிறகு தான் திருமணம் செய்துகொள்வேன் என்று ஸ்ரீதிவ்யா கூறியுள்ளதாக பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் சமீபத்தில் கூறியுள்ளார்.