அடேங்கப்பா! இத்தனை வருஷ பழக்கமா! பல சுவாரஷ்யங்களை போட்டுடைத்த பிரபல தொகுப்பாளினி!!

அடேங்கப்பா! இத்தனை வருஷ பழக்கமா! பல சுவாரஷ்யங்களை போட்டுடைத்த பிரபல தொகுப்பாளினி!!


vj-parvathy-tweet-about-ashwin

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் அஸ்வின். இவருக்கென ஏராளமான இளம் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மேலும் அவர் இளம்பெண்களின் கனவுகண்ணனாக திகழ்ந்து வருகிறார்.

இவர் இதற்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் ரெட்டைவால் குருவி என்ற தொடரில் நடித்து இருந்தார்.  அவர் ஏராளமான விளம்பரங்கள் மற்றும் குறும்படங்களில் நடித்துள்ளார். மேலும் ஓகே கண்மணி படத்திலும் ஆதித்ய வர்மா திரைப்படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் விஜே பார்வதி அஸ்வினுடன் இருக்கும் சில புகைப்படங்களை பகிர்ந்து, அஸ்வினை தனக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு முன்னரே தெரியும் என தெரிவித்துள்ளார்.

விஜே பார்வதி  குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் சில எபிசோடுகளில் கோமாளியாக பங்கேற்றார். மேலும் அந்த பதிவில் அவர், 2014 ம் ஆண்டு  முதல் அஸ்வினை தனக்கு நன்றாக தெரியும். நானும், அஸ்வினும் மதுரையில் விஜய் டிவி நிகழ்ச்சி ஆடிசனில் ஒன்றாக கலந்து கொண்டுள்ளோம் என பல அழகான நினைவுகளை பகிர்ந்துள்ளார்.