அடடா.. அனல் பறக்குமே.! வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையப்போவது இந்த பிரபலமா?? தீயாய் பரவும் தகவல்!!

அடடா.. அனல் பறக்குமே.! வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையப்போவது இந்த பிரபலமா?? தீயாய் பரவும் தகவல்!!


Vj parvathy may bigboss wild card entry

உலகநாயகன் கமல் தொகுத்து வழங்கி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 6. இதுவரை 35 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் தற்போது 16 போட்டியாளர்களே உள்ளனர் அதாவது 21பேர் களமிறங்கிய நிலையில் ஜி.பி முத்து தனது குடும்பத்தினரை காணவேண்டும் என்ற ஏக்கத்தில் தானாக வீட்டை விட்டு வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து டான்ஸ் மாஸ்டர் சாந்தி, அசல் கோலார், ஷெரினா மற்றும் கடந்த வாரம் மகேஸ்வரி என அடுத்தடுத்த வாரங்களில் எலிமினேஷனும் நடைபெற்றது. இந்த நிலையில் வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையப்போவது யார் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. மேலும் தானாக வீட்டை விட்டு வெளியேறிய ஜிபி முத்து மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையலாம் என கூறப்பட்டது.

bigboss

இந்த நிலையில் தற்போது வைல்ட் கார்டு போட்டியாளராக பிரபல விஜேவான பார்வதி என்ட்ரி கொடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் இதற்கு முன்பு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.