இவர்தான் தொகுப்பாளினி நக்ஷத்ராவின் அம்மாவா! கோலாகலமாக நடந்த கொண்டாட்டம்! வைரலாகும் க்யூட் புகைப்படம்!!

இவர்தான் தொகுப்பாளினி நக்ஷத்ராவின் அம்மாவா! கோலாகலமாக நடந்த கொண்டாட்டம்! வைரலாகும் க்யூட் புகைப்படம்!!


vj-nakshatra-mother-birthday-photo-viral

சன் டிவி, விஜய் டிவி என பல முன்னணி தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நக்ஷத்ரா. இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி கலை நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழா, விருது வழங்கும் விழா என ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். அனைவரையும் கவரும் அழகு,  கலகலப்பான பேச்சு என்ன பிரபலமாகியிருக்கும் நக்ஷத்ரா ஏராளமான குறும்படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும் தொகுப்பாளினி  நக்ஷத்ரா சன் தொலைக்காட்சியில் குஷ்பூ நடிப்பில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை லட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் நாயகி சீரியலிலும் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் சேட்டை, வாயை மூடி பேசவும், மிஸ்டர் லோக்கல் போன்ற திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் வணிகன் என்ற படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

தொகுப்பாளினி நக்ஷத்ராவிற்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. அவருக்கு சமீபத்தில்தான் ராகவ் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் நக்ஷத்ரா தனது குடும்பத்தினர் மற்றும் வருங்கால கணவருடன் தனது அம்மாவின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.