திடீரென கர்ப்பமாகிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை! புகைப்படத்தை கண்டு அதிர்ச்சியில் ரசிகர்கள்...

திடீரென கர்ப்பமாகிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை! புகைப்படத்தை கண்டு அதிர்ச்சியில் ரசிகர்கள்...


VJ deepika latest video

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல தொடர்களுக்கு மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு உள்ளது. அவ்வாறு அண்ணன்- தம்பிகள் பாசம், கூட்டுக்குடும்பத்தை மையமாக கொண்டு  ஒளிபரப்பாகி வரும்  பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்த தொடரில் ஸ்டாலின், சுஜிதா, குமரன், வெங்கட், ஹேமா, சரவண விக்ரம் பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். 

மேலும் இத்தொடரில் கடைசி தம்பியாக, வீட்டின் கடைக்குட்டியாக கண்ணன் கதாபாத்திரத்தில் சரவணவிக்ரம் நடிக்கிறார். இவர் தொடரில் காதலித்து திருமணம் செய்துக்கொண்ட ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் முதலில் நடித்தவர் விஜே தீபிகா. சில காரணங்களால் அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து வெளியேறினார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக உள்ள தீபிகா, அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய ரீல்ஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். ஜெய்பீம் படத்தில், நடிகை லிஜோமோல் ஜோஸ் பேசும் புகழ்பெற்ற வசனத்திற்கு இவர் செய்த வீடியோ ரசிகர்களிடையே பெரிய அளவில் வைரலாகி வருகிறது.