எல்லாம் பொய்.. தப்பிக்க வழி பாக்குறான்! கடும் ஆவேசத்தில் கதறிய விஜே சித்ராவின் தாய்.!

எல்லாம் பொய்.. தப்பிக்க வழி பாக்குறான்! கடும் ஆவேசத்தில் கதறிய விஜே சித்ராவின் தாய்.!


vj-chitra-mother-talk-about-hemanth-complaint

பிரபல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து பின்னர் விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து பெருமளவில் பிரபலமானவர் விஜே சித்ரா. இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். இந்நிலையில் சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி பூந்தமல்லி அருகே நட்சத்திர ஹோட்டலில் கணவர் ஹேமந்த்துடன் தங்கியிருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது அனைவருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

அதனை தொடர்ந்து சித்ராவின் தற்கொலைக்கு அவரது கணவர்தான் காரணம் என போலீசாரால் அவர் அவரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.பின்னர் இரு மாதங்களிலேயே ஜாமீனில் வெளிவந்தார். இந்நிலையில் அண்மையில்  ஹேமந்த் சித்ராவின் மரணத்தில் முக்கிய அரசியல்வாதிக்கு தொடர்புள்ளது, மேலும் அவர்களால் எனது உயிருக்கும் ஆபத்து உள்ளது என காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

VJ Chitra

இந்த நிலையில் சித்ராவின் தாயார், ஹேமந்த் இந்த வழக்கில் இருந்து தப்பிக்க பார்க்கிறார். சித்ராவுக்கு அரசியல்வாதியால் தொல்லை இருக்கிறது என்பதை எங்களிடம் முன்பே கூற வேண்டியதுதானே. அவர் வழக்கை குழப்பி அதிலிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார். அவர் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி என்னிடம் கடைசியாக பேசியது. பின் எங்களிடம் பேசவே இல்லை.

அவர் மீது தப்பு இல்லை என்றால் எங்களிடம் பேசியிருக்கலாமே. என் மகளை தேவதை போல் பார்த்து கொள்கிறேன் எனக் கூறிவிட்டு தற்போது 7 பேர் மிரட்டியதாக கூறுகிறார். அவர் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. சித்ரா என் பேச்சை  கேட்கவே இல்லை. சித்ராவை தன் மனைவி என கூறும் ஹேமந்த், அவர் இறந்த பிறகு ஒரு சடங்கு கூட செய்யவில்லை, பிறகு எதற்கு மனைவி என்று கூற வேண்டும் என ஆவேசமாக பேசியுள்ளார்.