இதை பார்க்க சித்ரா இல்லாமல் போயிட்டாங்களே! இறுதியாக பெற்றோருக்கு கொடுத்த கவுரவம்! நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!vj chitra calls movie audio and trailer launched today

பிரபல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் சித்ரா. அதனை தொடர்ந்து ஏராளமான சீரியல்களில் நடித்துள்ள அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த நிலையில் சித்ரா கடந்த சில மாதங்களுக்கு முன்பு நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பல கனவுகளுடன் வாழ்ந்து வந்த சித்ரா இப்படியொரு முடிவை எடுத்தது அனைவருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் தற்கொலைக்கு தூண்டியது அவரது கணவர் ஹேமந்த்தான் என போலீசார் அவரை கைது செய்தனர். இறப்பதற்கு முன்பு சித்ரா கால்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரைலர் வெளியீடு இன்று நடைபெறுகிறது. 

       calls

இப்படத்தின் இசைத் தொகுப்பை சித்ராவின் பெற்றோர்கள் வெளியிடுகின்றனர். மேலும் கால்ஸ் படத்தின் ட்ரெய்லரை  சினேகா, திலகவதி ஐ.பி.எஸ், சிவி திலகவதி , சின்மயி உள்ளிட்ட பெண் சாதனையாளர்கள் பலரும் வெளியிடுகின்றனர்.