அடஅட.. விஜே அஞ்சனாவா இது! டாப் ஹீரோயின்களையே ஓரம்கட்டிருவார் போல! அதுவும் அந்த நடையை பார்த்தீங்களா!!

அடஅட.. விஜே அஞ்சனாவா இது! டாப் ஹீரோயின்களையே ஓரம்கட்டிருவார் போல! அதுவும் அந்த நடையை பார்த்தீங்களா!!



Vj anjana latest video viral

சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக இருந்து ரசிகர்களிடையே நன்கு பரிச்சயமாகி பிரபலமாக இருந்தவர் விஜே அஞ்சனா. அவர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் விருது விழாக்கள், ஆடியோ வெளியீட்டு விழாக்கள் போன்றவற்றையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

அஞ்சனா கடந்த 2016 ஆம் ஆண்டு கயல் படத்தின் ஹீரோவான சந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இதற்கிடையில் சில ஆண்டுகள் தனது பணிக்கு இடைவெளிவிட்டிருந்த அஞ்சனா மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக களமிறங்கி சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அஞ்சனா வெள்ளித்திரை ஹீரோயின்களுக்கு இணையாக விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த வகையில் அவர் தற்போது செம மாடர்னாக ஹீரோயின்களையே மிஞ்சும் அளவிற்கு போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.