ஹீரோயின் ஆக போறிங்களா மேடம்? ஜிம்மில் ஒர்கவுட் செய்யும் VJ அஞ்சனா! வைரலாகும் வீடியோ

ஹீரோயின் ஆக போறிங்களா மேடம்? ஜிம்மில் ஒர்கவுட் செய்யும் VJ அஞ்சனா! வைரலாகும் வீடியோ


vj-anjana-latest-gym-workout-video-goes-viral

ஜிமில் ஒர்கவுட் செய்யும் VJ அஞ்சனாவின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தொகுப்பாளினி அஞ்சனா. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டும் இல்லாமல் பல்வேறு மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ள இவருக்கு ரசிகர்கள் மத்தியில் சற்று வரவேற்பு உள்ளது.

VJ Anjana

தொலைக்காட்சியில் பிரபலமாக இருந்த இவர் பின்னர் கயல் பட நடிகரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். திருமணத்திற்கு பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இருந்து சற்று ஒதுங்கி இருந்த இவர் தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்டிவாக உள்ளார்.

தற்போது ஜிம்மில் இவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றினை வெளியிட, அந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.