வரவர வேற லெவலில் அசத்துறீங்க! ஹீரோயின்ஸுக்கே டஃப் கொடுக்கும் விஜே அஞ்சனா! குவியும் லைக்ஸ்கள்!!

வரவர வேற லெவலில் அசத்துறீங்க! ஹீரோயின்ஸுக்கே டஃப் கொடுக்கும் விஜே அஞ்சனா! குவியும் லைக்ஸ்கள்!!


Vj anjana homelu pose photoshoot viral

சன்டிவி, சன் மியூஸிக், புது யுகம் என பல்வேறு தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி பிரபலமானவர் விஜே அஞ்சனா. ரசிகர்களின் பேவரைட் தொகுப்பாளினியாக வலம் வந்த அவர் விருது வழங்கும் விழாக்கள், ஆடியோ ரிலீஸ் விழாக்கள், படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு கயல் படத்தில் நடித்து மக்களிடையே பெருமளவில் பிரபலமான ஹீரோ சந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு நன்கு வளர்ந்த ஒரு மகன் உள்ளார். இதற்கிடையில் சில ஆண்டுகள் தனது தொகுப்பாளர் பணியில் இருந்து விலகியிருந்த அஞ்சனா மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் களமிறங்கி சில பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

அதனை தொடர்ந்து தற்போது சமூக வலைதளங்களில் செம பிஸியாக இருக்கும் விஜே அஞ்சனா கிளாமராக, விதவிதமாக ரசிகர்களை கவரும் வகையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இடையில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வந்த அவர் தற்போது ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் வகையில் ஃபுல் மேக்கப்பில், செம ஹோம்லியாக உடை அணிந்து போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது