ஏன், என்ன ஆச்சு... ட்விட்டரில் கதறி கதறி அழுத தொகுப்பாளினி அஞ்சனா...

ஏன், என்ன ஆச்சு... ட்விட்டரில் கதறி கதறி அழுத தொகுப்பாளினி அஞ்சனா...


Vj anjana emotional post goes viral

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கி பிரபலமானவர் விஜே அஞ்சனா. இவர் தனது திறமையின் மூலமாக ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார். அதுமட்டுமின்றி விருது வழங்கும் விழா மற்றும் ஆடியோ ரிலீஸ் விழாக்கள் போன்றவற்றையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

விஜே அஞ்சனா கடந்த 2016 ஆம் ஆண்டு கயல் பட ஹீரோவான சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ருத்ராஷ் என்ற மகன் உள்ளார். திருமணத்திற்கு பிறகும் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அதுமட்டுமின்றி நிறைய போட்டோ ஹூட்டையும் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்றைய தினம் அனைவரும் உலககோப்பை போட்டியில் இந்தியா வெற்றி பெறும் என நினைத்த நிலையில் தோல்வி அடைந்தது அனைவருக்கும் வருத்தத்தை கொடுத்தது. இதனால் பலரும் எமோஷ்னல் பதிவு போட்டு வந்தனர். அதில் தொகுப்பாளினி அஞ்சனா, மனசு வலிக்குது டா டேய் என கதறி கதறி அழும் எமோஞ்சியை பதிவு செய்து நல்லா தானடா ஆரம்பிச்சீங்க என பதிவிட்டுள்ளார்.