தளபதி 66 படத்தில் விஜய்க்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர்! அட.. இவரு அந்த அஜித் படத்தில் நடிச்சவராச்சே!!

தளபதி 66 படத்தில் விஜய்க்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர்! அட.. இவரு அந்த அஜித் படத்தில் நடிச்சவராச்சே!!



vivek-operai-may-be-act-as-villain-in-thalapathi-66

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ள இந்த படம் அடுத்த மாதம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் தமிழில் தோழா, மகரிஷி போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தளபதி 66வது படத்தில் நடிக்க உள்ளார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இந்த படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார்.

vivek operai

தளபதி 66 படத்தின் சூட்டிங் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது, தளபதி 66 படத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. விவேக் ஓபராய் இதற்கு முன் அஜித் நடித்த விவேகம் படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.