விஸ்வாசம் படத்திற்கு இப்படி ஒரு நிலைமையா? வெளியிலான அதிர்ச்சி தகவல்!Viswasam movie status in telungu

இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் விஸ்வாசம். கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியான விஸ்வாசம் திரைப்படம் பட்டி தொட்டி எங்கு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. அஜித் நடித்த படங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு வசூலை வாரி குவித்தது விஸ்வாசம் திரைப்படம்.

தமிழில் வெற்றிபெற்றதை தொடர்ந்து பல்வேறு மொழிகளில் டப் செய்யப்பட்டு விஸ்வாசம் படம் வெளியிடப்பட்டது. அந்த வகையில் மார்ச் மாதம் 1 ஆம் தேதி தெலுங்கில் டப் செய்யப்பட்டு விஸ்வாசம் படம் வெளியிடப்பட்டது. மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான படம் ரசிகர்கள் மத்தியில் சரியான வரவேற்பு கிடைக்காததால் படம் தோல்வியை தழுவம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  viswasam

மேலும் படம் வெளியாகி இரண்டு நாட்களை கடந்த நிலையில் மொத்த வசூலே 1 கோடிக்கும் குறைவு தான் என்று தகவல் வெளியாகியுள்ளது. விஸ்வாசம் திரைப்படம் தமிழில் வெற்றிபெற்ற அளவிற்கு மற்ற மொழிகளில் வரவேற்பு பெறவில்லை என்று கூறப்படுகிறது.