விஸ்வாசம் படம் மூலம் புது சாதனை படைத்துள்ள அஜித்! வெளுத்து வாங்கும் தூக்கு துறை!

Viswaasam movie crossed 200 crores collection


Viswaasam movie crossed 200 crores collection

இயக்குனர் சிவா இயக்கத்தில், தல அஜித் நடிப்பில் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி வெளியான விஸ்வாசம் படம் இன்றுவரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பொங்கலை முன்னிட்டு வெளியான பேட்ட, விஸ்வாசம் படங்கள் இரண்டுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் வெளியாகி 26 நாட்கள் ஆகியும் இன்றுவரை அனைத்து திரையரங்குகளுக்கு பிஸியாகவே உள்ளது.

viswasam

குறிப்பாக அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படம் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இன்றுவரை ஹவுஸ் புல் ஆகத்தான் உள்ளது. கிராமத்து பின்னணி, செண்டிமெண்ட் என அனைவரையும் மிரளவைத்துள்ளது விஸ்வாசம் படம்.

இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் வசூல் இதுவரை 200 கோடிக்கு மேல் தாண்டியிருக்கும் என கூறப்படுகிறது. இதுவரை வெளியான அஜித் படங்களில் இதுவே அதிக வசூல் செய்த படமாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. 200 கோடியை வசூல் செய்ததன் மூலம் வசூல் மன்னனாக மாறியுள்ளார் தல அஜித்.