சினிமா

மிக நெருக்கமாக முத்தமிடும் புகைப்படத்தை வெளியிட்டு இரண்டாவது காதலை உறுதிசெய்த விஷ்ணுவிஷால்! ஷாக்கான ரசிகர்கள்!

Summary:

vishnuvishal close with badminton player

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தில்  நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகர் விஷ்ணு விஷால். அதனை தொடர்ந்து அவர் ஏராளமான வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவரது நடிப்பில் இவற்றில் வெளிவந்த ராட்சசன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் வரவேற்பை பெற்று அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

இந்நிலையில் விஷ்ணு விஷால் தற்போது எப்ஐஆர் என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார். விஷ்ணு விஷால் கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி ரஜினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆர்யன் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், கடந்த வருடம் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

அதனை தொடர்ந்து விஷ்ணு விஷால் பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுடன் நெருக்கமாக பழகி வருகிறார். இருவரும் சேர்ந்து எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை சமூக வலைதளபக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், தகவல் வெளியானது. ஆனால் அதற்கு இருவரும் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் இருவரும் ஒன்றாக புத்தாண்டை கொண்டாடியுள்ளனர். அப்பொழுது இருவரும் நெருக்கமாக முத்தமிட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இதனை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

View this post on Instagram

Happy 2020 💕💕

A post shared by vishnu vishal (@iamvishnuuvishal) on


Advertisement