இரவில் நடுரோட்டில் காரில் இளைஞர்கள் செய்த மோசமான காரியம்! வேதனையுடன் வீடியோ வெளியிட்ட நடிகர் விஷ்ணு விஷால்!

Summary:

Vishnu vishal video about youngster misbehaviour in road

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடிகுழு என்ற படத்தில் நடித்ததன் மூலம் நடிகராக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். இப்படத்தை தொடர்ந்து அவர் நீர்பறவை, குள்ளநரிக் கூட்டம், முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, ராட்சசன் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.  மேலும் அவரது கைவசம் தற்போது காதன், ஜகஜால கில்லாடி, எப்ஐஆர், மற்றும் த்ரில்லர் படமான மோகன்தாஸ் ஆகியவை உள்ளன.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கும் விஷ்ணுவிஷால் அதிர்ச்சி வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், அவர் ஹைதராபாத்தில் இரவில் காரில் சென்று கொண்டிருந்த போது அவருக்கு முன்னால் சென்ற காரில் இருந்த இரு இளைஞர்கள் சீட்டில் அமராமல் கார் கதவில் அமர்ந்து சென்றுள்ளனர்.

இந்த வீடியோவை பதிவு செய்து பகிர்ந்த நடிகர் விஷ்ணு விஷால் அதில், இவர்கள் நம் நாட்டின் படித்த இளைஞர்கள். நான் இவ்வாறு செய்ய மாட்டேன். ஆனால் தற்போது இப்படியொரு பதிவை வெளியிடவேண்டிய  நிலை ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் அவர்கள்  தங்கள் உயிரை மட்டும் ஆபத்தில் வைக்காமல், இதுபோன்ற தேவையில்லாத செயல்களால் மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றனர் என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். மேலும் ஹைதராபாத் காவலர்கள் இதை கவனிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 


Advertisement