சினிமா

நான் காதலிப்பது இவரைத்தான்! ரகசியத்தை போட்டுடைத்த விஷால்!

Summary:

vishal talk about his marriage

தமிழ் சினிமாவில் செல்லமே’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகர் விஷால். இதை தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்த இவர் மாபெரும் ரசிகர்களை பெற்று தற்போது முன்னணி நடிகராக உள்ளார்.

மேலும் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர், திரைப்பட தயாரிப்பாளர் என  பல பொறுப்புகளை வகித்து வருகிறார்.

இந்நிலையில் விஷால் நடிகை வரலட்சுமியை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த நடிகர் விஷால் நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிந்ததும்தான் திருமணம் செய்வேன் என்றும் கூறியிருந்தார்.

    à®¤à¯Šà®Ÿà®°à¯à®ªà¯à®Ÿà¯ˆà®¯ படம்

இந்நிலையில் அயோக்யா படப்பிடிப்பில் இருந்த விஷாலிடம் இதுகுறித்து கேட்டபோது எனக்கும் அனிஷா ரெட்டிக்கும் திருமணம் என்பது உண்மைதான். இது காதல் திருமணம். ஆனால் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக கூறுவது உண்மையில்லை. நாளை  தான் இதுகுறித்து பேச உள்ளனர். இந்த ஆண்டு திருமணம் நடைபெறும். 

மேலும் நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பின்புதான் எனது திருமணம் நடக்கும் என்று கூறினேன். அதில் மாற்றம் இல்லை. கண்டிப்பாக நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்த பிறகு அனிஷாவை திருமணம் செய்வேன். திருமணம் சென்னையில் தான் நடக்கும் என்று கூறினார்.
 


Advertisement