அட.. இவரா! விஜய்க்கு வில்லனாகும் பிரபல முன்னணி நடிகர்! யார்னு பார்த்தீங்களா.! செம சர்ப்ரைஸில் ரசிகர்கள்!!

அட.. இவரா! விஜய்க்கு வில்லனாகும் பிரபல முன்னணி நடிகர்! யார்னு பார்த்தீங்களா.! செம சர்ப்ரைஸில் ரசிகர்கள்!!



Vishal going to act as villain for vijay

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். வாரிசு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து விஜய் மீண்டும் லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணியில் இணைந்து தனது 67வது படத்தில் நடிக்க உள்ளாராம்.  இதற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படம் கேங்ஸ்டர் படமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் விஜய் 50 வயது தாதா கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், அவருக்கு வில்லனாக ஆறு முன்னணி நடிகர்கள் நடிப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தது.

vishal

நடிகர் அர்ஜுன், இந்தி நடிகர் சஞ்சய்தத், இயக்குனர் கவுதம் மேனன், மிஷ்கின் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளதாக தகவல் கசிந்தது. இந்த நிலையில் தற்போது இப்படத்தில் வில்லனாக விஷாலை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாகவும், விஷாலை சந்தித்து லோகேஷ் கதை கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்நிலையில் படம் குறித்து ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.