சினிமா

நிச்சயதார்த்தத்தை வைத்துக்கொண்டு விஷாலுக்கு இப்படியொரு நிலையா? சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்.!

Summary:

vishal get small fracture while shooting spot

தமிழ் சினிமாவில் செல்லமே படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஷால். இவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராகவும், தென் இந்திய நடிகர்கள் சங்கப் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.

இவர் நடிகை வரலட்சுமியை காதலிப்பதாக வதந்திகள் பரவி வந்தது. இந்த நிலையில் அதற்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் விஷால், ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் தினேஷ் ரெட்டி-சவீதா தம்பதியின் மகள் அனிஷாவை காதலித்து, திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டார். மேலும் அனிஷா அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

தொடர்புடைய படம்

மேலும் விஷால் மற்றும் அனிஷாவின் நிச்சயதார்த்தம்  அனிஷாவின் சொந்த ஊரான  ஹைதராபாத்தில் வரும் 16ம் தேதி ஊரில் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது.

இந்த  நிலையில் விஷாலுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. விஷால் தற்போது என்.டி.ஆர். நடிப்பில் வெளியான டெம்பர் தெலுங்கு படத்தின் ரீமேக்கான அயோக்யா படத்தில் நடித்து வருகிறார். அதில் ஒரு பாடலுக்கு ஆடும்போது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவரது முழங்கையும் பயங்கரமாக வீங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 


Advertisement