சினிமா

திருமணம் நெருங்கிவந்த நிலையில் விஷாலுக்கு இப்படியொரு துயரமா? பரவிவரும் அதிர்ச்சி தகவல்!!

Summary:

vishal anitha marriage cancelled

தமிழ் சினிமாவில் செல்லமே படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஷால். இவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராகவும், தென் இந்திய நடிகர்கள் சங்கப் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.

இவர் நடிகை வரலட்சுமியை காதலிப்பதாக வதந்திகள் பரவி வந்தது. இந்த நிலையில் அதற்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் விஷால், ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் தினேஷ் ரெட்டி-சவீதா தம்பதியின் மகள் அனிஷாவை காதலித்து, திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவலை வெளியிட்டார்.

vishal marriage க்கான பட முடிவு

இதனை தொடர்ந்து மார்ச் 16 விஷால் மற்றும் அனிஷாவிற்கு ஹைதராபாத்தில் படுகோலகாலமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது அனிஷா-விஷால் திருமணம் நின்றுவிட்டதாக தகவல் பரவி வருகிறது.

மேலும், அனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த விஷால் மற்றும் அவருக்கு சம்மந்தமான அனைத்து புகைப்படங்களையும் நீக்கியுள்ளார். ஆனால், இந்த தகவல் பரவி வரும் நிலையில் இது குறித்து விஷால் தரப்பினரோ அல்லது அனிஷா தரப்பினரோ எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. மேலும் இதுகுறித்த எந்த விளக்கமும் அளிக்கவில்லை.இதனால் விஷால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.


 


Advertisement