புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
விஷாலுடன் ஜோடி போட்ட பிரியா பவானி சங்கர்.. என்ன காரணம் தெரியுமா.?
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வளர்ந்து வருபவர் ப்ரியா பவானி சங்கர்.இவர் தனது நடிப்பின் மூலம் படிப்படியாக வளர்ந்து வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் விஜய் தொலைக்காட்சியில் 'கல்யாணம் முதல் காதல் வரை' என்ற தொலைக்காட்சி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த தொடரின் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்தார் ப்ரியா பவானி சங்கர். இந்த தொடருக்கு பின்பு தொடர்ந்து பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதன்பின் சின்ன திரையிலிருந்து வெள்ளி திரைக்கு 'மேயாத மான்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
முதல் படம் வெற்றி பெற விட்டாலும் இவருடைய நடிப்பு பாராட்டப்பட்டு வந்தது. இப்படத்திற்கு பின்பு தொடர்ந்து வெள்ளி திரையில் பல திரைப்படங்களின் நடித்து தனக்கென தனி இடத்தை நிலைநாட்டி இருக்கிறார்.
இது போன்ற நிலையில், தற்போது ஹரி இயக்கத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கவிருக்கும் திரைப்படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்று கூறப்பட்டு வருகிறது. இச்செய்தி நடிகை பிரியா பவானி சங்கரின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.