அலயவிட்ட கமல்ஹாசன் அஜித்திடம் சரணடையும் ஹெச்.வினோத்? வெளியான தகவல்.!

அலயவிட்ட கமல்ஹாசன் அஜித்திடம் சரணடையும் ஹெச்.வினோத்? வெளியான தகவல்.!



Vinod and Ajith join 4th movie

தமிழ் சினிமாவில் சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய திரைப்படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக இருப்பவர் ஹெச்.வினோத்.  தற்போது இவர் கமல்ஹாசனை வைத்து புதிய திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

H vinod

ஆனால், அதன் பிறகு எந்த ஒரு அப்டேட்டும் வெளியே வரவில்லை. அதற்கு காரணம் கமல்ஹாசன் தற்போது மணிரத்தினம் படத்தை முடித்துவிட்டு, அதன் பிறகு பிரபாஸ் நடிக்கும் கல்கி படத்தையும் முடித்துவிட்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக கூறப்கிறது.

அதனால் வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படம் தொடங்க 2025 ஆம் ஆண்டு ஆகிவிடும் என கூறப்படுகிறது. இதனிடையே வினோத் தீரன் அதிகாரம் 2 படத்தை எடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அதற்கான கதை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

H vinod

மேலும், இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித்தை வைத்து ஒரு திரைப்படம் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ எதுவும் வெளியாகவில்லை.