40 வயது பிரபல நடிகையுடன் காதல்! விரைவில் திருமணம் செய்யவிருக்கும் நடிகர் வினய்! யார் அந்த நடிகை தெரியுமா??

40 வயது பிரபல நடிகையுடன் காதல்! விரைவில் திருமணம் செய்யவிருக்கும் நடிகர் வினய்! யார் அந்த நடிகை தெரியுமா??



Vinay going to marry actress vimala raman

தமிழ் சினிமாவில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் உன்னாலே உன்னாலே. இந்தப் படத்தின் மூலம் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் வினய். முதல் படத்திலேயே தனது கியூட்டான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து வினய் ஜெயங்கொண்டான், மோதி விளையாடு, மிரட்டல், ஒன்பதுல குரு போன்ற படங்களில் நடித்தார். 

அந்த படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றியை தரவில்லை. அதனைத் தொடர்ந்து ஹீரோவாக நடித்து வந்த வினய் மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் படத்தின் மூலம் வில்லனாக அவதாரமெடுத்தார். அதனைத் தொடர்ந்து அவர் டாக்டர், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்திருந்தார்.

இந்த நிலையில் 42 வயதாகும் வினய், 40 வயதுமிக்க நடிகை விமலா ராமனை கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வருவதாகவும், மேலும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. மேலும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனவும் கூறப்படுகிறது.

Vinay

நடிகை விமலா ராமன் தமிழில் பாலசந்தர் இயக்கிய பொய், இயக்குனர் சேரனுக்கு ஜோடியாக ராமன் தேடிய சீதை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.