சினிமாவில் கொடூர வில்லன்! ஆனால் நிஜத்தில் மாஸ் ஹீரோ! அஜீத் பட வில்லனுக்கு குவியும் பாராட்டுகள்.! ஏன் தெரியுமா?

சினிமாவில் கொடூர வில்லன்! ஆனால் நிஜத்தில் மாஸ் ஹீரோ! அஜீத் பட வில்லனுக்கு குவியும் பாராட்டுகள்.! ஏன் தெரியுமா?



Villain actorserve food daily for poor people

தமிழ் சினிமாவில் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த ராஜா எங்க ராஜா படத்தில் வில்லனாக நடித்ததின் மூலம் பெருமளவில் பிரபலமானவர் ராஜசிம்மன். பார்ப்பதற்கு மிரட்டலான தோற்றத்தில் காட்சியளிக்கும் அவரை கண்டாலே ரசிகர்கள் மிரளுவர். 

ராஜசிம்மன் நடிகராக மட்டுமின்றி, தயாரிப்பாளராகவும் உள்ளார். 
மேலும்  அவர் என்னை அறிந்தால், கொம்பன், நண்பேண்டா, கடம்பன் மற்றும் மருது போன்ற படங்களிலும் வில்லனாக நடித்துள்ளார்.இவ்வாறு வில்லன் நடிகராக தமிழ் சினிமாவை மிரட்டி வரும் அவர் நிஜ வாழ்க்கையில் மாபெரும் ஹீரோவாகவே  உள்ளார்.

Rajasimman

அதாவது அவர் தினம்தோறும் தனது சொந்த செலவில் சாப்பிட கஷ்டப்படும் ஏழை எளிய மக்கள் 100 பேருக்கு உணவளித்து வருகிறார் . மேலும் இதனை வெளியில் சொல்லாமல் செய்து வந்துள்ளார்.

 இந்நிலையில் சம்பளம் குறைவாக வாங்கினாலும் பசியில் கஷ்டப்படும் ஏழைகளின் பசியை போக்கும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.மேலும் இதன் மூலம் அவர் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.