இந்த வில்லன் நடிகர் சீயான் விக்ரமின் தம்பியா? வைரலாகும் புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்!!

இந்த வில்லன் நடிகர் சீயான் விக்ரமின் தம்பியா? வைரலாகும் புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்!!vikram with brother photo leaked

தமிழ் சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் சீயான் விக்ரம். படத்திற்காக தனது உடலை வருத்தி படத்தின் கதைக்கு ஏற்றார் போல் தோற்றத்தை கொண்டுவருவதில் இவருக்கு இணை இவரே என்று கூறலாம். சங்கர் இயக்கத்தில் உருவான ஐ போன்ற படங்களில் தனது உடலை வருத்தி பல்வேறு வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டிருந்தார் நடிகர் விக்ரம்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் கமலின் தயாரிப்பில், இயக்குநர் ராஜேஷ் செல்வா இயக்கத்தில் விக்ரம் நடித்த கடாரம் கொண்டான் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

vikram
இவ்வாறு தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களை கொடுத்து பெரும் ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கும் விக்ரம் தனது மகன் துருவ்வை ஆதித்ய வர்மா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.

vikram

இதனை தொடர்ந்து நடிகர் விக்ரமின் தம்பி அரவிந்த் ஜான் விக்டர் எப்போ கல்யாணம் என்ற படத்தில் வில்லனாக அறிமுகமாகவுள்ளார். இப்படத்தை இருதயராஜ் இயக்குகிறார். இப்படம் பள்ளி படிப்பு முடித்து கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் தடம் மாறி செல்வதை மையமாக கொண்டு உருவாக்கப்படவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.