சினிமா

தொடங்கியது விக்ரம் வேதா ரீமேக் படப்பிடிப்பு! அட.. யாரெல்லாம் நடிக்கிறாங்க பார்த்தீர்களா!!

Summary:

துபாயில் தொடங்கிய விக்ரம் வேதா ரீமேக் படப்பிடிப்பு! அட.. யார் நடிக்கிறாங்க பார்த்தீர்களா!!

தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி மற்றும் மாதவன் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டான திரைப்படம் விக்ரம் வேதா. இந்த படத்தை புஷ்கர் காயத்ரி இயக்கியிருந்தார்.
ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார், கதிர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

விக்ரம் வேதா திரைப்படம் வெளிவந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது. இதில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் சைஃப் அலிகானும், மாதவன் கதாபாத்திரத்தில் ஹிர்த்திக் ரோஷனும் நடிக்கிறார்கள். ஒரு வருடங்களுக்கு மேலாக இப்படத்தின் படப்பிடிப்புக்கான முன்பணிகள் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இன்று அதன் படப்பிடிப்பு பூஜையுடன் துபாயில் தொடங்கப்பட்டுள்ளது. இதனை அதன் தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பலரும் படக்குழுவிற்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

 


Advertisement