"அந்த மனசு தான் சார் கடவுள்" - வெள்ள நிவாரண பணிக்கு ரூ.10 இலட்சம் வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்.!
காதல், கொலை, இறப்பு.. அனைத்திற்கும் எப்படி ஒரே எக்ஸ்பிரஷன் கொடுக்க முடியும்? - முக்கிய நடிகரை கலாய்க்கும் சீயான் விக்ரம்..!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் சீயான் விக்ரம். இவர் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அதில் பிதாமகன், ஐ, இருமுகன் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட இவரது நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றிருந்தது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியின்போது நடிகர் விக்ரம் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் விக்ரம் மற்றொரு நடிகர் குறித்து பேசியுள்ளார். அவர் பேசும்போது நடிகரின் பெயரை குறிப்பிடாமல், "அம்மா இறந்தாலும் அதே எக்ஸ்பிரஷன்.
நடிகை பூ கொடுக்கும்பொழுதும் அதே எக்ஸ்பிரஷன். கொலை செய்தால் கூட அதே எக்ஸ்பிரஷன். அனைத்திற்கும் எப்படி ஒரே மாதிரி முகத்தை வைத்துக்கொள்ள முடியும்? என்று கூறி கேலி செய்கிறார். இது இணையத்தில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் விக்ரம் எந்த நடிகர் குறித்து கூறியுள்ளார்? என்பது தெரியவில்லை.
சியான் யாரை சொல்றாருன்னு உங்களுக்கு புரியுதா 😂
— RamKumarr (@ramk8060) October 5, 2022
அவரே தான் தாறுமாறாக தாக்கப்பட்டு இருக்கிறார் 🤪pic.twitter.com/9nKy6z5sVT