நாயகன் மீண்டும் வரார்.! அசத்தலான ப்ரோமோவுடன் விக்ரம் படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!!

நாயகன் மீண்டும் வரார்.! அசத்தலான ப்ரோமோவுடன் விக்ரம் படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!!



Vikram movie OTT release date announced

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல் நடிப்பில் வெளிவந்து தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் விக்ரம். நடிகர் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில்,நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும் இப்படத்தில் நடிகர் சூர்யா ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வெறும் 3 நிமிடங்களே வந்தாலும் திரையரங்கை அதிர வைத்துள்ளார். விக்ரம் படம் வெளியாகி உலகம் முழுதும் திரையரங்குகளில் தாறுமாறாக வசூலை வாரி இறைத்து வருகிறது.

இந்த நிலையில் படம் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது விக்ரம் படம் ஜூலை 8 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. உலக நாயகன் மீண்டும் வரார் என டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ட்விட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.