செம பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கும் விக்ரம் இசை வெளியீட்டு விழா.! அதுவும் எங்கு தெரியுமா.?

செம பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கும் விக்ரம் இசை வெளியீட்டு விழா.! அதுவும் எங்கு தெரியுமா.?


vikram-movie-audio-launch-in-dubai

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான உலக நாயகன் கமல், மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் விக்ரம். இந்தப் படத்தை ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் மிகவும் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. மேலும் இப்படத்தில் பஹத் பாசில் ,விஜய் சேதுபதி, நரேன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

விக்ரம் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் வருகின்ற ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.  மேலும் விக்ரம் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

kamal

இந்த நிலையில் விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த நடிகர் கமல் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இசை வெளியீட்டு விழா துபாயில் நடைபெற உள்ளதாகவும், மே மாதம் முதல் வாரத்தில் இந்நிகழ்ச்சி நடக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.