சினிமா

விக்ரம் 62 படம் குறித்து வெளிவந்த சூப்பரான தகவல்! அட.. இயக்குனர் யார்னு பார்த்தீங்களா!!

Summary:

விக்ரம் 62 படம் குறித்து வெளிவந்த சூப்பர் தகவல்! அட.. இயக்குனர் யார்னு பார்த்தீங்களா!!

தமிழில் ஏராளமான வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து  முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். அவர் தனது கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடிப்பில் சிறந்து விளங்குபவர். நடிகர் விக்ரமுக்கு என ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் விக்ரம் அவரது மகன் துருவ்வுடன் இணைந்து நடித்த மகான் திரைப்படம் அண்மையில் வெளிவந்து ரசிகர்கள்  மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அவரது கைவசம் தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன், துருவ நட்சத்திரம் போன்ற படங்கள் உள்ளன. அவை ரிலீஸுக்கு தயாராக உள்ளன.அதனை தொடர்ந்து  நடிகர் விக்ரம் ரஞ்சித் இயக்கத்தில் தனது 61வது திரைப்படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் விக்ரம் நடிக்கவிருக்கும் 62 வது படம் குறித்த தகவல்கள் பரவி வருகிறது. அதாவது நடிகர் விக்ரமின் 62-வது படத்தை ஏ.ஆர் முருகதாஸ் இயக்க உள்ளார் எனவும், அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தீனா, ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி, சர்க்கார் போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். 


Advertisement