பாக்கியலட்சுமி சீரியலில் புதிய செழியன் யார் தெரியுமா.? அட இவரா... வெளியான புதிய தகவல்.!

பாக்கியலட்சுமி சீரியலில் புதிய செழியன் யார் தெரியுமா.? அட இவரா... வெளியான புதிய தகவல்.!



Vikas entered in bakiya Lakshmi serial

பிரபல தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் ஓடி கொண்டிருக்கும் சீரியலில் ஒன்று தான் பாக்கியலட்சுமி. சாதாரண குடும்பத் தலைவியின் வாழ்க்கையை மையமாக கொண்டு ஒளிப்பரப்பாகும் இச்சீரியலுக்கு குடும்ப பெண்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. 

தற்போது பாக்கியலட்சுமி தொடர் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது. கோபி பாக்கியாவை விவாகரத்து செய்து விட்டு  ராதிகாவை திருமணம் செய்ய இருக்கும் செயல் எப்போது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தெரிய வரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

vikas

இந்நிலையில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் திடீரென சீரியலிருந்து வெளியேறினார் செழியன் கதாபாத்திரத்தில் நடித்த ஆர்யன். ஆர்யனுக்கு பதில் செழியன் கதாபாத்திரத்தில்  யார் நடிக்கப் போகிறார்கள் என்று ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜபார்வை தொடரில் நடித்த விகாஷ் சம்பத் தான் புதிய செழியனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.