வேட்டையன் படம் ஓடிய திரையரங்கில் காலாவதியான பாப்கார்ன்; ரஜினி ரசிகர்கள் ஆவேசம்.!
விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் பெயர் இதுதான்! சூப்பர் தகவல் இதோ!
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடித்துவருகிறார் விஜய். தெறி, மெர்சல் என இவர்கள் கூட்டணியில் உருவான இரண்டு படங்களும் மாபெரும் வெற்றிபெற்ற நிலையில் தற்போது தாப்தி 63 படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துவருகிறார். மேலும் பல்வேறு முன்னணி சினிமா நட்சத்திரங்களும் இந்த படத்தில் நடிக்க, பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் இந்த படத்தில் சிறு வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் படத்தின் பெயர், பர்ஸ்ட்லுக் என எதுவும் வெளியாகாத நிலையில் படத்தின் பெயர் "பிகிலு" என செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்து அதிகார்பூர்வர் தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில் ரசிகர்கள் உருவாக்கிய சில புகைப்படங்கள் வைரலாகிவருகிறது.