மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த், மகன் வெளியிட்ட மனதை உருகவைக்கும் வீடியோ.!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த், மகன் வெளியிட்ட மனதை உருகவைக்கும் வீடியோ.!


vijaykanth son leaked request sad video about vijaykanth health

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை தொடர்பாக அவரின் மகன் விஜய் பிரபாகர் உருக்கமாக வீடியோ ஒன்றை  வெளியிட்டுள்ளார்.

 தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார். இந்நிலையில் நேற்றிரவு சென்னை மணப்பாக்கத்தில் உள்ள ‘மியாட்’ என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Latest tamil news

இதற்கிடையில் விஜயகாந்த் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு வதந்திகள் பரவியது. 

இந்நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தே.மு.தி.க. தலைமை கழகம் அறிவித்தது.

இந்நிலையில், விஜயகாந்தின் மூத்த மகன் விஜய் பிரபாகர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

Latest tamil news
 
அதில் “என் தந்தை உடல்நிலை குறித்து தேவையற்ற வதந்தி பரவி வருகிறது. அவர் நன்றாக இருக்கிறார். தேவையில்லாத தகவல்களை பரப்பி விடுவதால் உங்களுக்கு என்ன நன்மை? உங்கள் வீட்டில் இப்படி ஒருவர் மருத்துவமனைக்கு சென்றால் இப்படித்தான் பேசுவீர்களா? இதனால் நாங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். 
 
அவருக்கு ஒன்றும் ஆகாது. தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம். எல்லோருக்கும் வேலை, குடும்பம் இருக்கிறது. அதை பாருங்கள்.  அவர் ஆயிரம் மடங்கு நலமுடன் திரும்பி வருவார். பாசிட்டிவாக யோசியுங்கள். அவரை நினைத்து பெருமைபடுங்கள் என அவர் உருக்கமாக அந்த வீடியோவில் பேசியுள்ளார்.