சினிமா

ஆளப்போறான் தமிழன்..உலக அளவில் சாதனை படைத்து மாஸ் காட்டிய விஜய்.! பெருமையில் குவியும் வாழ்த்துக்கள்.! புகைப்படம் உள்ளே..

Summary:

vijaygot award in england for best actor

சாதனை படைக்கும் சர்வதேசக் கலைஞர்களுக்கு மரியாதை கொடுத்து அவர்களை கௌரவிக்கும் விதமாக சர்வதேச சாதனையாளர் அங்கீகார விருதுகள் (IARA) என்ற அமைப்பு 2014-ம் ஆண்டு முதல் சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கிவருகிறது.

மேலும் , சினிமா, இசை, நாடகங்கள், பாடல் என பல்வேறு வித்தியாசமான  துறைகளில் உலக அளவில் சாதனை புரிந்து வெற்றி பெற்றவர்களை பாராட்டும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதில் தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றியை கொடுத்த மெர்சல் திரைப்படத்துக்காக, சிறந்த சர்வதேச நடிகருக்கான விருது இளையதளபதி விஜய்க்கு பரிந்துரை செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து சிறந்த சர்வதேச நடிகருக்கான விருதை விஜய்தான் பெறுவதாகவும்  செப்டம்பர் மாதம் IARA அமைப்பு அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில் நடிகர் விஜய் அந்த மாபெரும் விருதை இங்கிலாந்திற்கு சென்று பெற்றுள்ளார்.


கோட் சூட்டுடன் சும்மா மாஸ் காட்டி விருது வாங்கிய விஜயின் புகைப்படங்களை IARA அமைப்பு  தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளது.

இந்தப் புகைப்படம் தற்போது வைரலாக பரவி,ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Advertisement