தனது குழந்தையுடன் விஜய் பாடலுக்கு டிக்டாக் செய்து அசத்திய விஜயலெட்சுமி - வைரலாகும் வீடியோ.

தனது குழந்தையுடன் விஜய் பாடலுக்கு டிக்டாக் செய்து அசத்திய விஜயலெட்சுமி - வைரலாகும் வீடியோ.



Vijayalakshmi video

தமிழ் சினிமாவில் சென்னை 28 படத்தின் மூலம் பெருமளவில் பிரபலமானவர் நடிகை விஜயலட்சுமி. அதனை தொடர்ந்து அவர் அஞ்சாதே, சரோஜா, அதே நேரம் அதே இடம், பிரியாணி போன்ற படங்களில் நடித்தார். 

இதனை தொடர்ந்து அவருக்கு சரியான படவாய்ப்புகள் கிடைக்காத நிலையில் நீண்ட காலங்களாக காதலித்து வந்த இயக்குநர் ஃபெரோஸ் முகமதுவை கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். 

vijalakshmi

ஃபெரோஸ் முகமது ,தூங்காநகரம், வல்லினம் போன்ற படங்களில் துணை இயக்குனராகப் பணியாற்றியுள்ளார்.மேலும் கிருஷ்ணா மட்டும் பண்டிகை போன்ற படங்களை இயக்கியுள்ளார்.இந்த அழகிய தம்பதியினருக்கு  நிலன் என்ற மகன் உள்ளார். 

இதனை தொடர்ந்து விஜயலஷ்மி பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்2வில் வைல்ட் கார்டு என்ட்ரியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார். இந்நிலையில் தற்போது தனது குழந்தையுடன் விஜய் பாடலை பாடலுக்கு டிக்டாக் செய்து அசத்தி உள்ளனர்.