சினிமா

வாவ்.. கண்ணுபட போகுதே! வளைகாப்பு விழாவில் நடிகை விஜயலட்சுமி எப்படி இருந்துள்ளார் பார்த்தீங்களா! புகைப்படம் இதோ!!

Summary:

வாவ்.. கண்ணுபட போகுதே! வளைகாப்பு விழாவில் நடிகை விஜயலட்சுமி எப்படி இருந்துள்ளார் பார்த்தீங்களா!

தமிழ் சினிமாவில் 2007ஆம் ஆண்டு வெளிவந்து மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற சென்னை 600028 என்ற படத்தில் நடித்ததன் மூலம்  அறிமுகமானார் நடிகை விஜயலட்சுமி. இவர் தமிழ் திரைப்பட இயக்குனர் அகத்தியனின் மகள் ஆவார். அதனைத் தொடர்ந்து இவர் அஞ்சாதே, சரோஜா, அதே நேரம் அதே இடம், கற்றது களவு, பிரியாணி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

விஜயலட்சுமி தமிழ் மட்டுமின்றி கன்னட திரைப்படத்திலும் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து வெள்ளித்திரையில் களமிறங்கிய அவர் சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி தொடரில் முன்னணி கதாநாயகியாக நடித்தார். பின்னர் அந்த தொடரிலிருந்து பாதியிலேயே விலகிய அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி சிறப்பாக விளையாடினார்.

மேலும் விஜயலட்சுமி சமீபத்தில் ஜீ தமிழில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி உலகளவில் பிரபலமடைந்த சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதன் வெற்றியாளர் ஆனார். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் தற்போது தனது வளைகாப்பு விழா புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.


Advertisement