தமிழகம் சினிமா

பிரபல நடிகரின் மகள் செய்யும் வேலையா இது . நடுரோட்டில் அதுவும் நைட்டியோடு ..முகம் சுளித்த மக்கள் .!

Summary:

பிரபல நடிகரின் மகள் செய்யும் வேலையா இது . நடுரோட்டில் அதுவும் நைட்டியோடு ..முகம் சுளித்த மக்கள் .!

நடிகர் விஜயகுமார்  தனது மூத்த மகள் வனிதா தனது வீட்டை ஆக்கிரமித்துக் கொண்டு காலி செய்ய மறுப்பதாக கூறி தனது போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

நடிகர் விஜயகுமாருக்கு மதுரவாயல் அருகே ஆலப்பாக்கத்தில் வீடு ஒன்று உள்ளது. அவர் இந்த வீட்டை சினிமா படப்பிடிப்பிற்காக வாடகைக்கு விடுவதை  வழக்கமாக வைத்திருந்தனர். அதுபோல அவர் சில வருடங்களுக்கு முன் தனது மகள் வனிதாவிற்கு படப்பிடிப்பிற்காக வாடகைக்கு விட்டுள்ளார்.
 
ஆனால் படப்பிடிப்பு முடிந்த பின்னும் வனிதா வீட்டை காலி செய்யாமல் அங்கேயே தங்கியுள்ளார். மேலும் இது எனது சொத்து, வீட்டை காலி செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளார். 

vijayakumar with daughter vanitha க்கான பட முடிவு

இந்த நிலையில் நடிகர் விஜயகுமார் தரப்பில் பரபரப்பான புகார் மனு ஒன்று மதுரவயல் போலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்டது.

அதில், மதுரவாயில் அருகே ஆலப்பாகத்தில் உள்ள என்னுடைய வீடு ஒன்றை நடிகையும் எனது மகளுமான வனிதாவுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் படப்பிடிப்பிற்காக வாடகைக்கு கொடுத்தேன். ஆனால் படப்பிடிப்பு முடிந்த பின்னரும் வனிதா வீட்டை காலி செய்யாமல் இருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்து வீட்டை காலி செய்து தரவேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக செய்தி சேகரிக்க ஆலப்பாக்கத்தின் வீட்டிற்கு சென்றனர்.

அப்பொழுது வனிதா பத்திரிக்கையாளர்களிடம் தீவிர  வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவர்களை அங்கிருந்து விரட்ட தகாத வார்த்தையால் பேசியுள்ளார் .

இவ்வாறு நடுரோட்டில் நைட்டியில் நின்றுக்கொண்டு செய்தியாளர்களிடம் மோசமாக நடந்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Advertisement