அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
"அட்லீயைப் பாராட்டி இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்!" அட்லீ கூறிய தகவல்!
இயக்குனர் ஷங்கருடன் நண்பன் மற்றும் எந்திரன் ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லீ. இவர் 2013ம் ஆண்டு ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் நண்பன் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த போது நடந்த ஒரு சம்பவத்தை அட்லீ கூறியுள்ளார். அதுகுறித்து அட்லீ கூறியதாவது, " நண்பன் படத்தின் போது விஜயுடன் நெருங்கிப் பழக வாய்ப்பு கிடைத்தது. இறுதி நாள் படப்பிடிப்பு முடிந்ததும் விஜய் என்னை கேரவனுக்கு அழைத்துப் பேசினார்".
அப்போது அவர் ஒரு நாற்காலியைப் போட்டு என்னை அமரவைத்து, "நீங்கள் இந்தப் படத்தில் உங்கள் கேப்டன் சொல்வதைக் கேட்டு நன்றாக வேலை செய்துள்ளீர்கள். உங்கள் வேலை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. எனக்கு ஒரு கதை தயார் செய்துவிட்டு வந்து என்னைப் பாருங்கள்" என்று விஜய் கூறினார்.

"என்னைப்பார்த்து தனக்கு ஒரு கதை தயார் செய்யுங்கள் என்று கூறிய முதல் நடிகர் விஜய் தான். அன்றிலிருந்தே நான் விஜய் ரசிகனாக மாறிவிட்டேன். பின்னர் ராஜா ராணி படத்தை இயக்கிய பிறகு விஜயை சந்தித்து தெறி படத்தின் கதையைக் கூறினேன்" என்று அட்லீ கூறியுள்ளார்.