சினிமா

பாகுபலி இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் விஜய்..? வெளியான சூப்பர் தகவல்.! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!

Summary:

Vijay will be playing a cameo role in SS Rajamoulis RRR movie

இந்திய அளவில் பிரமாண்ட இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் ராஜமௌலி. பாகுபலி, பாகுபலி 2 என இரண்டு மெகாஹிட் படங்களை இந்திய சினிமாவிற்கு கொடுத்தவர். மேலும், மாவீரன், நான் ஈ போன்ற வெற்றிப்படங்களையும் இயக்கியவர். பாகுபலி வெற்றிக்கு பிறகு RRR என்ற படத்தை இயக்கி வருகிறார் ராஜமௌலி.

ஜூனியர் NTR , ராம் சரண், ஆலியா பாட், அஜய் தேவ்கன் போன்ற பல்வேறு பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துவருகின்றனர். இந்நிலையில், இந்த படத்தில் தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற நடிகரான தளபதி விஜய்யை, கெஸ்ட் ரோல் ஒன்றில் நடிக்க படக்குழு அனுகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

RRR படம் வரலாற்று சமாந்தப்பட்ட கதை என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், RRR படத்தில் விஜய் கெஸ்ட் ரோலில் நடித்தால் நிச்சயம் மிகப்பெரும் எதிர்பார்ப்பு ஏற்படும் என விஜய் ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர். இந்த படத்தில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவரான சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.


Advertisement